விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பல கிராமங்களில் புதுவை மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படும் கள்ளச்சாராயம் மற்றும் பீர் பிராந்திகள் தங்கு தடையின்றி வியாபாரம் நடைபெற்று வருவது வழக்கம். இது போன்ற பிரபல கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு காவல்துறையில் ஒரு சில போலீசாரம் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதனால் இவர்களால் கள்ள சாராயத்தை தடுத்து நிறுத்த முடியாத நிலை இருந்துள்ளது இந்நிலையில் மரக்காணம் அருகே எக்கிய குப்பம் மீனவர் கிராமத்தில் அருகில் கடற்கரை ஓரம் உள்ள வம்பா மணல் பகுதியில் மரக்காணம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அமரன் வயது (24 )இவர் வழக்கம் போல் நேற்று முன்தினம் சாராய விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார்.
அப்போது எக்கியர் குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த பலர் தினமும் சாராயம் குடிப்பது போல் அன்றும் சாராயம் வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர் வீட்டிற்கு சென்ற பொழுது சங்கர் வயது (55) தரணிவேல் வயது (50) சுரேஷ் வயது (65)மண்ணாங்கட்டி வயது (47) மற்றொரு மண்ணாங்கட்டி வயது (50)இவர்கள் மயங்கி கீழே விழுந்து உள்ளனர் இதனைப் பார்த்த அவர்களின் உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை மாநிலத்தில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அங்கு மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்துள்ளனர் ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அன்று இரவு சங்கர்,தரணிவேல், சுரேஷ், துரைராஜ் ஆகிய 4 நபர்களும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். நேற்று இரவில் இருந்து மலர்விழி என்ற 70 வயது மூதாட்டி, 70 வயது முதியவர் கேசவலு, மரக்காணத்தைச் சேர்ந்த சங்கர் (55), 45 வயதான விஜயன் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 13 பேர் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.