அப்போ இனித்தது இப்போ கசக்குதா.. அப்படினு பயில்வான் யாரை கேட்டார் தெரியுமா..?
பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தொடர்ந்து நடிகர்கள் மற்றும் நடிகைகளை பற்றிய அந்தரங்க விஷயங்களை பேசிவருகிறார். இதைப்பற்றி பலரும் இவர் பேசுவதில்லை எதுவும் உண்மை இலை என தெரிவித்து வந்தாலும் அவற்றை காதில் கூட வாங்காமல் தொடர்ந்து பிரபலங்களை பற்றி பேசுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றில் பயில்வான் அவர்கள் நடிகை ராதிகாவை பற்றி பேசியது தற்போது பேசுப்பொருளாகி இருக்கிறது.
பயில்வான் ரங்கநாதன் அவர்கள் 90 களில் காமெடி ரோலிலும், கேரக்டர் ரோலிலும் நடித்த அவர் தற்போது சினிமா சம்பந்தபட்ட நிகழ்ச்சிகளுக்கு சென்று சர்ச்சைக்கு உள்ளான கேள்விகளை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
சினிமாவில் நான்தான் எல்லாமே எனக்கு சினிமாவில் இருக்கும் அனைவரை பற்றியும் நன்றாகவே தெரியும் என்ற எண்ணம் கொண்டிருப்பவர். தனுஷ், வடிவேலு, கவுண்டமணி, நயன்தாரா, த்ரிஷா, ரேகா நாயர் என பலரை பற்றியும் பேசியிருக்கிறார்.
இப்படி அவர் பேசிய ரேகா நாயர், சாந்தனு, கே.ராஜன், கீர்த்தி பாண்டியன் ஆகியோர் பற்றி பேசியதால் அவர்கள் பயில்வான் முகத்தில் அடித்தார்போல பேசிவிடுகிறார்கள். குறிப்பாக ரேகா நாயர் அவர்கள் நேரில் சண்டையே போட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராதிகா அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது அப்போது ராதிகா அவர்கள் சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்களை பற்றி பேசுபவர்களை காட்டமாக பேசியிருக்கிறார். இதனை பலரும் வரவேற்கும் நிலையில் பயில்வான் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராதிகா வெளிநாட்டுகாரர் ஒருவரை மணந்தாரே அவர் என்ன ஆனார் எனக் கேட்க அதற்கு ராதிகா அதை கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது என்றார்.
அதற்கு பயில்வான் அவர்கள் செய்திகளை சொல்வது பத்திரைக்யாளரின் கடமையல்லவா என பதிலளித்து இருக்கிறார்.
இப்போது எங்களை பற்றி ஏன் பேசுகிறீர்கள் என ராதிகா கேட்கிறார். அப்போ நாங்கள் சொன்னது இனித்தது ஆனால் இப்போ கசக்குதா என கேள்வி எழுப்பினார். முன்பு ராதிகா அவர்கள் சிறந்த நடிகை எனவும் அழகாக தமிழ் பேசுகிறார்கள் எனவும் நாங்கள் தானே சொன்னோம், அப்போ தாங்களை பற்றி பேசியது இனித்தது ஆனால் இப்போ உண்மையை சொன்னால் கசக்குதா என்றார்.