ஜம்மு காஷ்மீர் நடைபயணத்தின்போது பாதுகாப்பு விஷயத்தில், காவல்துறை தோல்வியடைந்துவிட்டதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் அனந்த் நாக்கில், ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டார். 11 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பயணம் தொடங்கிய 500 மீட்டரிலேயே பாதுகாப்பு குறைபாடு காரண்மாக நடைபயணமானது ரத்து செய்யப்பட்டது.
இது குறித்து பேசிய ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் செயல்பாடு தோல்வியடைந்ததாகவும், கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறைரினர் பாதுகாப்பு பணியில் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனால் தான், மேற்கொண்டு நடைபயணம் செல்வதை தனது பாதுகாப்பு அதிகாரிகள் விரும்பாததால், நடைபயணத்தை ரத்து செய்ததாக ராகுல்காந்தி தெரிவித்தார்.
Discussion about this post