மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அப்டேட்..!! 3 நாட்கள் மட்டுமே டைம்..!!
வீட்டின் அருகேயுள்ள மின் கம்பங்களை மாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்தும் மக்கள் மின்கட்டணம் செலுத்துவதை சுலபமாக்குவது குறித்தும் தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.
அதாவது வீட்டின் அருகியுள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க விரும்பினாலோ அல்லது வீட்டின் மேற்பகுதியில் செல்லும் மின் ஓயார்களால் உங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ இணையத்தின் வழியில் விண்ணப்பிக்கும் படி ஏற்பாடு செய்துள்ளது..
https://app1.tangedco.org/nsconline/mobval.xhtml?apl=DCW3 என்ற இணையத்தில் மின் மாற்று விண்ணப்பம் மட்டுமின்றி மின்சாரம் குறித்த புகார்களையும் இதில் பதிவேற்றலாம்..
* இதுவரையில் மின்கட்டணமானது மின் அலுவலகத்திற்கு நேரில் சென்றோ அல்லது., ஏஜென்ட் மூலமாகவோ பணம் செலுத்தும் ஆப்ஷன் இருந்தது..
* அதன் பின்னர் ஜி-பே., போன்-பே., மூலம் பணம் செலுத்தும் வசதி கொண்டு வரப்பட்டது.
* தற்போது வாட்ஸ் அப் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்சார வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.
* அதாவது 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான மின் கட்டணத்தை பயனாளர்கள் யுபிஐ (UPI) வாயிலாக கட்டணம் செலுத்தும் வாட்ஸ் ஆப் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
* முதலாவதாக வாட்ஸ் ஆப்பில் இருந்து TANGEDCO என்பது இதன் Code.. 9498794987 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கு மின் கட்டணத்தை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. .
அதேபோல் மின்கட்டணம் பற்றிய விவரங்கள் வாட்ஸ் ஆப்-ல் அனுப்பப்பட்ட பின் அதனை UPI மூலம் அனுப்பலாம்..,
அதேபோல் மின்கம்பிகள் குறித்து புகார்கள் அளித்தால் அதனை 3 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு இருக்க வேண்டும்..
மேலும் மின் இணைப்பு குறித்த விண்ணப்பம் கொடுத்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க தேவை இல்லாத பட்சத்தில் 3 நாட்களில் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுத்து இருக்க வேண்டும். என அதிரடி அறிவிப்புகளை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..