நீங்கள் பார்க்க மறந்த முக்கிய செய்திகள்..!! உங்கள் ஊரை தேடி மதிமுகம்..!!
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜோதிராமன் என்பவர் கடைவீதியில் ரோந்து வாகனத்தில் சென்றபோது செல்போன் பேசிக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற கிஷோர் என்ற கல்லூரி மாணவனை காவல் ஆய்வாளர் கண்டித்தபோது கிஷோர் திமிராக பேசியதால் அந்த மாணவனின் செல்போனை வாங்கி வைத்துக்கொண்டு காவல் நிலையம் வர சொல்லியுள்ளார்.
தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த மாணவன் மற்றும் அவரது தந்தை மகேஸ்வரன் கடைவீதியில் தன் மகனை அடித்து செல்போனை ஏன் பிடுங்கி வந்தீர்கள் என்று கூறி ஆய்வாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் காவல் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்து விட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக இருவர் மீதும் காவல் ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்கி மிரட்டியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், தனியார் பயிற்சி பள்ளி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலமானது. நேற்று அம்மூர் அரிசி கமிட்டியில் தொடங்கி வாலாஜா ரயில்வே சந்திப்பு வரை நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றி வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் ஏந்தி இந்த விழிப்புணர்வு பேரணியில் பொது மக்களுக்கு மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று மக்களிடத்தில் பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வை நடத்தினர். இறுதியாக வாலாஜா ரயில் நிலையத்தில் பறையிசை முழங்க சிலம்பாட்டம் நடத்தி மாணவர்கள் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று கோஷம் எழுப்பினர்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா வேந்தர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க மோட்ராக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அஷ்வின் ராஜா கலந்து கொண்டு மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.
இந்த 33 வது பட்டமளிப்பு விழாவில், சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 3508 இளங்கலை பட்டதாரி மாணவர்களுக்கும், 644 முதுநிலை பட்டதாரி மாணவர்களுக்கும், 122 பிஎச்டி மாணவர்களுக்கு டாக்டர் பட்டத்தை பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் அமெரிக்க மோட்ராக் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆகியோர் வழங்கினர்.
சாதனை மாணவர்கள் 45 பேருக்கு தங்க மெடல்கள் என மொத்தம் 4152 மாணவர்களுக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பட்டங்கள் வழங்கப்பட்டது.
தருமபுரியில் தனியார் திருமண மண்டபத்தில் பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல அட்டை வெளிநாடு இந்திய ரூபாய் நோட்டுகள் வரலாறு குறித்து விழிப்புணர்வு இலவச கண்காட்சி 3 நாட்கள் நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் 2 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சேர சோழ பாண்டியன் காலத்தில் பயன்படுத்திய நாணயங்கள், லாந்தர் விளக்கு, அகல்விளக்கு, செப்பு நாணயங்கள், தபால் தலைகள், இந்திய ரூபாய் நோட்டுகள், தபால்தலைகள், பழங்கள ஒட்டை நாணயங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன இக்கண்காட்சியை, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பலர் பார்வையிட்டு வியப்பில் ஆழ்ந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் புவனேஸ்வரி பேட்டை பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் காரில் செல்லும் போது முன்னே சென்ற இருசக்கர வாகனத்தில் கார் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தின் மீதும் மற்றும் சாலையோரம் சிம் கார்டு விற்பனை செய்த அவர்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த பாஸ்கர் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் விபத்து குறித்து தகவல் அறிந்த வந்த காவலர்கள் வாகனங்களை பறிமுதல் செய்து ராம்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..