சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜா மேடையில் ரஜினி குறித்து பேசி தனுஷை நெகிழ வைத்தார்.
சென்னையில் உள்ள தீவுத்திடலில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி ‘ராக் வித் ராஜா’ என்ற பெயரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கங்கை அமரன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனுஷ் மற்றும் அவரது இரு மகன்கள், பாடகர் மனோ, எஸ் பி.பி சரண் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இசைஞானி இளையராஜா ‘ஜனனி ஜனனி…’ உள்ளிட்ட பல பாடல்களைப் பாடினார். அவருடன் சேர்ந்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, பாடகர் மனோ உள்ளிட்ட பலரும் மேடையில் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர்.
அப்போது “என்னுள்ளே என்னுள்ளே…” பாடலைப் பாடிய இளையராஜா மேடையின் முன்புறம் அமர்ந்திருந்த நடிகர் தனுஷ்ஷை எழுந்து நிற்க சொன்னார், இந்த பாடல் நன்றாக வர உன்னுடைய மாமனார் தான் காரணம்.
ரஜினிகாந்த் ரசனையோடு, காட்சியின் சூழ்நிலையை கூறியதால்தான் பாடல் சிறப்பாக வந்தது என்று கூறிய நிலையில் தனுஷ் புன்னகைத்தவாறு ரசித்து கைதட்டினார்.