இழப்பீடு கேட்ட இளையராஜா..!! பிரபல படத்திற்கு நோட்டிஸ்..!! அதிர்ச்சியில் இயக்குனர்..!!
தமிழ் திரையுலகிற்கு என்னற்ற பாடல்களை கொடுத்துள்ளார். அன்னக்கிளி திரைப்படத்தில் இசையமத்ததன் மூலம் அறிமுகமான இவர் இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சமீப தினங்களாகவே இவர் பல்வேறு சர்ச்சையை கிலப்பி வருகிறார்.
இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடது என தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி படத்தின் அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக நிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் பின்னர் அவருக்கும் வைரமுத்துவிற்கும் இடையே ஏற்பட்டு வரும் பிரச்சனை என தமிழ் சினிமாவில் பூகம்பமாக வெடித்து வருகிறது.
தற்போது மீண்டும் புதிய பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தில் தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக படக்குழுவிற்கு இளையராஜா நோட்டிஸ் அனுப்பியுள்ளார்.
மலையாளத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியானது. இயக்குனர் சிதம்பரம் இயக்கிய இந்த படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹி,பாபு சாகிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மலையாளத்தில் வெளியான இப்படத்தை மொழிகளை கடந்து பலரும் பாரட்டி வருகின்றனர்.
கொடைக்கனாலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் கமல் நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான குணா திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காதல் பாடலான கண்மணி அன்போடு காதலன் என்ற பாடல் இந்த படத்தில் நட்புக்கு உரிய பாடலாக காட்சிப்படுத்தியிருப்பார்கள்.
கமல் பாரட்டை பெற்ற மஞ்சும்மால் பாய்ஸ் :
படம் வெளியான போது, படத்தை பார்த்து வியந்த நடிகர் கமல்ஹாசன், மஞ்சும்மல் பாய்ஸ் பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்.. என்ற பாடல் இளையராஜா இசையமைப்பில் உருவான மிகப் பெறிய காதல் பாடல் ஆகும். இந்த பாடல் தான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மிகப்பெரிய வரவேற்பை பெற இந்த முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தான் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குணா படத்தில் இடம்பெற்ற தன்னுடைய பாடலை பயன்படுத்தியதற்காகவும், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இளையராஜாவின் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் மேலும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்த படக்குழு மற்றும் நெட்டிசன்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனார்.
– பவானி கார்த்திக்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..