விஜயுடன் அந்த பாடலில் நடிக்க பயந்தேன்….நடிகை நமிதா பேட்டி….!!
நமிதா :
தமிழ் திரைப்பட நடிகையான நமிதா தமிழ் மட்டுமன்றி கன்னடம் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
நமிதா 2001 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண வாழ்க்கை :
கடந்த 2017 ஆம் ஆண்டு திரைப்பட நடிகரான வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளது.
கவர்ச்சி நயாகி நமிதா :
கவர்ச்சி நாயகியான நமிதா விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர். அடுத்து இவர் நடித்த ஏய் திரைப்படத்தில் இடம் பெற்ற அர்ஜூனா அர்ஜூனா என்ற பாடலின் மூலம் க்ளாமராக நடிப்பதை தொடங்கினார். அதன்பின் தொடர்ச்சியாக க்ளாமரில் மட்டுமே நடித்தார்.
ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிப்பதன் மூலம் இவருக்கென ரசிகர் கூட்டமே இருந்தது. பல முன்னனி நடிகர்களுடன் நடித்த நமிதா அவருடைய ரசிகர்களால் திடிரென தவிர்க்கபட்டார்.
இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்த நமிதா தற்போது மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.அந்த வகையில் நடிகை நமிதா தொடர்ந்து யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார்.
அந்த பேட்டியில் விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் படத்தில் நடித்த அனுபவத்தையும் அஜித்துடன் பில்லா படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
பில்லா :
அஜித், நயன்தாரா,நமிதா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா.
இப்படத்தில் நடிப்பதற்கு முன்பாக ஒருதடவை கூட நடிகர் அஜித்தை நான் பார்த்ததே இல்லை. அதேபோல் பில்லா படம் முடிந்த பின்னரும் அஜித்தை சந்திக்கவில்லை என நடிகை நமிதா அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.
அஜித்குமார் போலத்தான் நானும் ரொம்பவே பிஸியாக இருப்பேன். யாரிடமும் சரியாக பேசக் கூட மாட்டேன். அதனால், எனக்கு ரொம்ப ஆட்டிட்யூட் எனக் நெருங்கிய வட்டாரங்களில் கூறுவார்கள்.
விஜயுடன் அந்த பாடலுக்கு நடிக்கவே பயந்தேன் :
அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ரேயா மற்றும் நமிதா நடித்துள்ளனர். “சாட்டர்டே நைட் பார்ட்டிக்கு போகலாம் வரியா”பாடலுக்காக தாய்லாந்தில் உள்ள ஒரு தீவுக்கு சென்றிருந்தோம் .
ஸ்பீட் போட்டில் அழைத்துச் சென்றனர். முதலில் நேராக சென்றுக் கொண்டிருந்த போட் ஒரு கட்டத்துக்கு மேல் செங்குத்தாக செல்ல ஆரம்பித்ததும் பயந்து நடுங்கி ஹனுமான் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தேன். அந்த பாடலின் போது அந்த தீவில் நடனமாடவே ரொம்பவே பயந்தேன் என நமிதா கூறியுள்ளார்.
நெட்டிசன்களின் கருத்து:
நமிதா யூடியூப் சேனல்களுக்கு தீவிரமாக பேட்டிகளை அளித்து வருவதற்கு பின்னணி காரணம் மீண்டும் நடிக்க வருதற்கு தான் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.