டீ குடிச்சா கொரோனா வராதா..! இது என்ன புதுசா இருக்கு.
கொரோனா பரவிய காலத்தில் இந்திய நாட்டை தவிர பிற நாடுகள் தான் அதிகம் பாதித்துள்ளது. அதிலும் இறப்பு விகிதம் இந்தியாவில் 5-8 மடங்கிற்கும் குறைவு தான். இதற்கான காரணம் குறித்து, ஐ.சி.எம்.ஆர் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வில் இந்தியர்களின் பாரம்பரிய உணவு தான் அதற்கு காரணம் என்று தெரிந்துள்ளது.
தினமும் காலை எழுந்தவுடன் பருகும் தேநீர், அதிலும் இஞ்சி டீ, மசாலா டீ என பருகுவது வயிற்றை சுத்தம் செய்து கழிப்பில் அகற்றி விடுகிறது.
தினமும் காலை பருகும் காபி, மற்றும் மற்ற நீர் ஆகாரத்தை விட தேநீருக்கு சக்தி அதிகம் எனவும். அதிலும் சிலர் நாளொன்றுக்கு பல முறை தேநீர் அருந்துவதை வழக்கமாக வைத்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
நாளொன்றுக்கு பலமுறை தேநீர் அருந்துவதால், HDL (High Density Lipoprotein) அளவை அதிகப்படுத்துகிறது. மேலும் தேநீர் பருகுவதால், அதிலுள்ள கேட்டசின்கள் ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரடை குறைக்க உதவுகிறது.
மேலும் நாம் உண்ணும் உணவில் கூட மஞ்சள் இருப்பதால், வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது.
மஞ்சளில் உள்ள குர்குமின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எனவே தான் மற்ற நாட்டை விட இந்தியாவில், கொரோனா இறப்பு விகிதம் குறைவு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.