தங்கர்பச்சன் நினைத்திருந்தால் அதை செய்திருக்க முடியும்..!!
கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளராக களம் நிறங்கியுள்ள “தங்கர்பச்சன்” அவர்களை பற்றி ஒரு சிறு தொகுப்பாக பார்க்கலாம்.
இவர் மட்டும் அவரது காலங்களில் நினைத்திருந்தால் இன்று கடலூர் மாவட்டத்தில் எண்ணற்ற சினிமா படைப்பாளிகளையும்.., கலைஞர்களையும்.., உருவாக்கி இருக்க முடியும்.
அதுமட்டுமின்றி நமது மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்பையும் வாழ்வாதாரத்தையும் உருவாக்கி கொடுத்திருக்க முடியும்…
சினிமா வாழ்க்கை :
இவரது பல்லாண்டு கால சினிமா வாழ்க்கையில் இதுவரை ஒரே ஒரு அடிப்படை அடிமட்ட சினிமா கலைஞனை கூட இவரால் உருவாக்க முன்வரவில்லை..
தென் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சினிமா பிரபலங்களும் தான் பிறந்த மண்ணில் இருந்தோ.., அல்லது தனது மாவட்டத்திலிருந்தோ.., எண்ணற்ற சினிமா கலைஞர்களை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க இயலாது..
அதற்கு உதாரணம் இவர் எடுத்த படங்களில் மக்கள் மனதில் இடம் பெற்ற அழகி மற்றும் பள்ளிக்கூடம் போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமின்றி கிராமபுறங்களில் சுற்றி திரிந்த இளைஞர்களுக்கும் சினிமா வாய்ப்பு கொடுத்துள்ளார்.
சினிமாவில் சிக்கல் :
ஒருமுறை இவருக்கு சினிமா வட்டாரத்தில் பிரச்சனை எழுந்த போது சென்னையில் இவருடன் துணை நிற்க ஆளே இல்லாமல் தன்னந்தனியாக தத்தளித்த காலமும் உண்டு என்பதை எல்லோரும் அறிவார்கள்..
இப்போதும் இதே நிலைதான் கட்சியில் எவரையும் வளர்த்து விடும் எண்ணம் இவருக்கு இல்லை.., அதற்கான முயற்சியில் இவர் ஒருபோதும் ஈடுபட்டது கிடையாது.
இவருடன் இருந்த நமது மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அலைகழிக்கப்பட்டு ஏமாற்றத்துடன் வெளியேறினார்கள் என்பதே இவரின் வரலாறு..
பத்திரக்கோட்டையின் ஹீரோ :
இவர் பிறந்த பத்திரக்கோட்டையில் காண்டீபன் ஒரு சிறந்த தொழிலதிபர், மரியாதையானவர் நேர்மையானவர். அவர் பிறந்த பத்திரக்கோட்டை பள்ளிகளுக்கு நிறைய நிதி உதவிகள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே ஊரில் பிறந்த இவர் இதுவரை உதவிகள் செய்யவில்லை என்பது குறிப்பிடதக்கது.
தேர்தல் களம் :
இந்நிலையில் இவர் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்.
ஆனால் மக்களிடம் அவருக்கு எதிர்ப்புகள் திரும்பியுள்ளது. அதற்கு காரணம். கடந்த மார்ச் 27ம் தேதி கடலூரில் இவர் மேற்கொண்ட பிரச்சாரம்.
அன்று கூட்டத்தில் பேசிய அவர், நான் 7 வயதில் பார்த்த அதே கிராமம் இன்னும் அப்படியே தான் இருக்கிறது.., இன்று வரை மக்கள் அப்படியே பரதேசிகளாவே இருக்கிறார்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் பாமகவை எல்லாம் விமர்சனம் செய்யலாம். ஆனால் இதே பாமகவை ஒரு நாள் எல்லாம் உயர்த்தி பார்ப்பார்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..