இடியமின்னின் அடுத்த ஒரு இடி தகவல்..?
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக.., தமிழகத்தில் குறிப்பிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை கொட்டி தீர்க்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
22/08/23 :
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழையும் சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
23.08.2023 :
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த
மழையும் சில மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24.08.2023 முதல் 28.08.2023 வரை :
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் லேசானது மழையும் பெய்யக்கூடும்.
சென்னை :
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் எனவும் சென்னையின்புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை முதல் மிதமான மழையும்.., அதிக பட்ச வெப்பநிலையாக 33 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் வெப்பமும் குறைந்த பட்ச வெப்பமாக 23-24 டிகிரி வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post