“அறையின் உள்ளே நான் கதறி அழுவேன்..” – மேடையில் உருக்கமாக பேசிய யுவன்..!
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர், தற்போது நடிகர் விஜயின் தி கோட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இதனால், யுவன் சங்கர் ராஜா வருத்தம் அடைந்ததாக, இணையத்தில் தகவல் கசிந்திருந்தது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா, பள்ளி ஒன்றிற்கு, சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
அப்போது, அந்த விழா மேடையில் பேசிய யுவன் சங்கர் ராஜா, “நான் ஆரம்பக் காலங்களில் இசையமைத்த பாடல்கள், ரசிகர்களை பெருமளவில் கவரவில்லை. இதனால், நான் இசையமைக்கும் படங்கள் தோல்வி அடைந்துவிடுகிறது என்ற முத்திரை என்மீது குத்தப்பட்டது.
இதனை அறிந்த நான், அறையின் உள்ளே சென்று, பலமுறை கதறி அழுதிருக்கிறேன். பின்னர் தான், என்ன நடந்தது என்பதை கவனித்து இசையமைத்தேன். அதன்பிறகு, இந்த நிலையில் நான் தற்போது இருக்கிறேன்.
எனவே, நெகட்டிவ் சிந்தனை கொண்டவர்கள் நம்மை வீழ்த்துவதற்கு முயற்சி செய்துக் கொண்டே இருப்பார்கள். அதற்கு நாம் செவி சாய்க்கக் கூடாது” என்று தெரிவித்தார்.
-பவானி கார்த்திக்