எனக்கு அவருடன் நடிக்க ஆசை..!! நடிகர் சூர்யா ஓபன் டாக்..!!
மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் சூர்யா…
சிவா இயக்கத்தில் சூர்யா, திரிஷா., நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா படம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது.
உலகமெங்கும் பத்தாயிரம் தியேட்டர்களில் வெளியாகும் இந்த படத்தின் பிரீ புக்கிங் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் சூர்யா அலித்த ஒரு பேட்டியில் ஜோதிகாவுடன் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எனது ஆசை கனவாகவே இருந்து வருகிறது.
அதை விரைவில் நனவாகும் என்று எதிர்பார்க்கிறேன். அதே சமயம் அப்படி நாங்கள் இணைந்து நடிக்கும் பட வாய்ப்பு என்பது தானாக அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். எந்த இயக்குனர் இடத்திலும் எங்களுக்கு ஏற்ற கதையை உருவாக்குங்கள் என்று நானாக கூற மாட்டேன் என்று கூறியுள்ளார்.
சூர்யா மேலும் திருமணத்திற்கு முன்பு சூர்யாவும் ஜோதிகாவும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..