இவர்களுக்கு நான் தான் எதிரி..!! தவெக மாநாட்டில் விஜய் அதிரடி..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் பேர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு தற்போது தொடங்கியுள்ளது..
முன்னதாக பாரதியார், காமராசர், முத்துராமலிங்க தேவர், உள்ளிட்ட பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்..
அதன் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது., அதனை தொடர்ந்து கட்சியில் கொள்கை பரப்பு செயலாளர் வெங்கட்ராமன் வாசிக்க தவெக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்..
அதன் பின்னர் கட்சிக்கொடி பாடலுடன் மாநாடு தொடங்கியது., அதனை தொடர்ந்து கட்சியின் கொள்கை தலைவர்களாக பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோர் பெயர்கள் அறிவிக்கபட்டது..
அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் வரவேற்புரை ஆற்றினார் அதன் பின்னர் கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் வெங்கட்ராமன் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்..
அதன் பின்னர், கட்சியின் கொள்கை பரப்பு பாடலும், கொள்கைகளும் ஒலிபரப்பு செய்யப்பட்டது..
அதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசினார்..,
“என் நெஞ்சில் குடியிருக்கும்., என தொடங்கினார் ஒரு குழந்தைக்கு அதன் தாய் கொடுக்கும் பாசத்தை எப்படி வெளிப்படுத்த முடியாதோ அதை போல் நான் இருக்கிறேன்.
அதேபோல் அந்த குழந்தைக்கு பயம் இருக்கிறதா என்று கேட்டால் மழலை சிரிப்பில் சிரித்துக்கொண்டே கடக்கும்., அதைப்போல் தான் நாங்களும்., அரசியல் எனும் பாம்பை கண்டு பயம் இல்லை.. என கூறினார்..
அதனை தொடர்ந்து பேசிய அவர் திராவிடமும், தமிழ்த் தேசியமும் தான் எங்களது இரு கண்கள் என கூறினார்.,
பாஜக என்பது எங்களது சித்தாந்த எதிரி, திமுக அரசியல் எதிரி எனவும் கூறினார்.
இருக்க இடம், உண்ண உணவு, கல்வி, வேலை இதைக்கொடுக்க முடியாத அரசு ஒரு அரசா..? எனவும் கேள்வி எழுப்பினார். இது அவரின் அரசியல் களத்தில் முதல் அதிரடி எனவும் அக்கட்சி தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..