மார்க் ஆண்டனி படம் எப்படி இருக்கு..? ஒரு குட்டி திரை விமர்சனம் பார்க்கலாமா..!!
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட டைம் ட்ராவல் படமாக உருவாகி வெளியாகியிருக்கும் படம்தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் நடிகர் விஷால், நடிகர் SJ சூர்யா, நடிகை அபிநயா, நடிகை ரித்து வர்மா, நடிகர் சுனில் என பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு மக்கள் நல்ல வரவேற்பை தருகின்றன .
படம் வெளியான முதல்நாளிலே பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம், விஷாலுக்கு ஒரு காம்பேக் என்றால் அது மிகையாகாது.
இந்நிலையில், நடிகர் விஷால் அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு வீடியோபதிவிட்டியிருக்கிறார். அதில் மக்கள் கொடுக்கும் ஆதரவாலும், கடவுளின் ஆசிர்வாதத்தாலும் இந்த படம் வெற்றியே பெற்றுவருகிறது.
இந்த படம் பிளாக் பஸ்டர் என அனைவரும் சொல்லி கேட்கும்போது மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும், படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பாராட்டுகளை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் அந்த வீடியோவில் கூறியிருந்தார் .
மேலும், திரையுலகை சேர்ந்த பலரும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டும் போது மிகவும் மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமில்லாமல், படத்தின் ரிலீசுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய விஷால், இந்த படத்தை பார்க்க வரும் ஒவ்வொருவரின் டிக்கெட் விலையிலிருந்தும் ஒரு ருபாய் என சேகரித்து மக்கள் சார்பாக விவசாயிகளுக்கு கொடுக்கப்போவதாக கூறியிருந்தார்.
நன்றி சொல்லும் வீடியோவில் அந்த சத்தியத்தை செயல்படுத்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார். மார்க் ஆண்டனி படத்தை பார்த்துவிட்டு வரும் ரசிகர்களின் முகத்தில் மகிழ்ச்சியே பார்க்கும்போது எனக்கும் மிகுந்த சந்தோசமாக இருப்பதாக கூறினார் .
பெரும்பாலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் மார்க் ஆண்டனி திரைப்படம் இந்த ஆண்டின் ஒரு முக்கிய மற்றும் காமெடி என்டேர்டைன்மெண்ட் படம் என்று கூறலாம். அது மாட்டுமல்லாமல், நடிகர் விஷாலின் படங்களில் இந்த மார்க் ஆண்டனி படம் மிகவும் முக்கிய மற்றும் சிறந்த படம் என்றால் அது மிகையாகாது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..