டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர் தினம் ஆக மாறியது எப்படி..?
ஒவ்வொரு நாளும் வகுப்பறையில் தங்களை அயராத அர்ப்பணிப்பு மூலம் கல்வியையும், அறிவையும் போதிப்பது ஆசிரியர்கள் மட்டுமே, மருத்துவர், காவலர், இராணுவ வீரர்கள், என அனைவரையும் உருவாக்குவது ஆசிரியர்கள் மட்டுமே.
என்னதான் ஒரு மாணவன் படித்தாலுமே அவனுக்கு சிறந்த முறையில் கல்வியை சொல்லி தருவது ஆசிரியர் மட்டுமே.
தத்துவஞானி, அறிஞர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட “சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்” இந்திய வரலாற்றில் கவனிக்கத்தக்க தலைவர்களில் ஒருவராக இருந்தார்.
இந்தியாவின் கல்வி நிலப்பரப்பை வடிவமைப்பதற்காக அவர் அயராது உழைத்தார், புகழ்பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.
பிறப்பு :
செப்டம்பர் 5ம் தேதி 1888ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருத்தணியில் தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளி படிப்பை திருத்தணியிலும், திருப்பதியில் படித்தார். பின் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டம் பெற்ற இவர், சைதாப்பேட்டையில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர்ந்து ஆசிரியராக பயிற்சி பெற்றார்.
ராதாகிருஷ்ணன் கல்கத்தா பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு மதிப்புமிக்க நிறுவனங்களில் பேராசிரியராக பணியாற்றினார். 1931 முதல் 1936 வரை ஆந்திர பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணை வேந்தராகவும், 1939 முதல் 1948 வரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் நான்காவது துணை வேந்தராகவும் பணியாற்றினார்.
துணை குடியரசு தலைவர் :
1949 முதல் 1952 வரை சோவியத் யூனியனின் இந்தியாவின் இரண்டாவது தூதராகவும், 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும், 1962 முதல் 1967 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராகவும் இருந்தார்.
ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக மாறியது :
சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட காரணம், கல்விக்காக அவர் செய்த விலைமதிப்பற்ற பங்களிப்பு, ஆசிரியர் பணியில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பும் தான்,
அவருக்கு மரியாதை மற்றும் நன்றி அளிக்கும் விதமாக ராதாகிருஷ்ணனின் அவரின் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆசிரியர் தினம் :
அவர் குடியரசு தலைவராக பணியாற்றிய போது முன்னாள் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரை சந்தித்து பிறந்தநாளை கொண்டாடினர், அப்போது அவர் ஒரு பணிவான மற்றும் மனதைத் தொடும் வகையில், எனது பிறந்த நாளை கொண்டாடுவதற்குப் பதிலாக, தேச நலனுக்காக பணியாற்றும் ஆசிரியர்களையும், உன்னதமான கற்பிக்கும் தொழிலையும் மதியுங்கள் என அன்போடு கூறியுள்ளார்.
எனவே அவரின் ஆசைப்படி மாணவர்களின் எதிர்காலத்திற்காக பணியாற்றி வரும் ஆசிரியர்களை போற்றும் விதமாகவும்.., அவர்களுக்கு வருடத்தில் ஒரு நாள் நன்றி சொல்லும் விதமாகவும் “ஆசிரியர் தினம்” கொண்டாடப்படுகிறது.
கருவில் பிறந்த பிள்ளையை விட தன்னிடம் “கல்வி” கற்றுக்கொண்ட பிள்ளைகளின் வளர்ச்சியை பார்த்து பெருமை படும் “ஆசிரியர்கள்” அனைவருக்கும் மதிமுகம் சார்பாக “ஆசிரியர் தினம்” நல்வாழ்த்துக்கள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..