திருவண்ணாமலையில் 20 கோடி ரூபாயை மோசடி செய்த பெண் சிக்கியது எப்படி..?
திருவண்ணாமலையில், 20 கோடி ரூபாய் மதிப்பில் பட்டுச்சேலை வாங்கி மோசடி செய்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் திருப்பதியைச் சேர்ந்த காயத்ரி, மாதவி, என்ற இரண்டு பெண்கள் மற்றும் ஆரணி, கொசப்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் ஆகிய மூவரும், 20 கோடி மதிப்பிலான பட்டு சேலைகளை, காசோலைகளை கொடுத்து கடனாக வாங்கி சென்றுள்ளனர்.
ஆனால் குறிப்பிட்டபடி வங்கியில் காசோலை செலுத்திய போது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், வியாபாரிகள் நேரில் சென்று கேட்டபோது விரைவில் தருகிறேன் என்று கூறிவிட்டு இரண்டு பெண்களும் தலைமறைவானதால், பட்டு சேலைகள் கொடுத்த வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்து காயத்ரி, மாதவி, மற்றும் செல்வராஜ் ஆகியோரிடம் இருந்து ரூ.20 கோடி பணத்தை பெற்று தர வலியுறுத்தி புகார் அளித்தனர்.
பட்டு சேலை வியாபாரிகளிடம் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் 20 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகளை வாங்கி மோசடி செய்த இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post