செவ்வாய் கிரகத்தில் வீடுகள் கட்ட உருளைகிழங்குகள் மூலம் தயாரிக்கப்படும் ஸ்டார் கிரீட் போதுமானது என்று இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். மற்றொருபுறம் இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, செவ்வாய் கிரகத்தில் வீடு கட்டுவதற்கான தொழில்நுட்பத்தை ஆராய்ந்து கண்டறிந்துள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஸ்டார் கிரீட் என்ற புதிய பொருளை கண்டறிந்துள்ளது. விண்வெளி தூசு, உருளைக்கிழக்கு மாவு, உப்பு ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்டார் கிரீட் ஆனது செவ்வாய் கிராகத்தில் வீடுகளை கட்டுவதற்கு பயன்படுத்த ஏற்றது என மான்செஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கலவையானது சாதாரண கான்கிரீட்டை விட இரண்டு மடங்கு வலிமையானது ஆகும்.
ஓபன் இன்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையின் படி, செவ்வாய் கிரகத்தில் கிடைக்கூடிய தூசுகளை உருளைக்கிழக்கு மாவுடன் கலப்பதன் மூலமாக தயாரிக்கப்படும் கலவையானது மிகவும் வலிமையான கட்டுமான பொருளை உருவாக்க உதவியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்த விஞ்ஞானிகள் குழு விண்வெளி வீரர்களின் ரத்தம் மற்றும் சிறுநீரைக் கொண்டு பைண்டிங் ஏஜெண்ட்டை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது. அதன் விளைவாக கண்டறியப்பட்ட கான்கிரீட் மிகவும் வலிமையானதாக இருந்தாலும், அதனை தயாரிக்க விண்வெளி வீரர்களின் ரத்தம் தேவைப்பட்டதால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக உருளைக்கிழக்கில் உள்ள ஸ்டார்ட் சத்தை பயன்படுத்தி ஸ்டார் கிரீட் தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post