வரலாற்றாசிரியர் விஞ்ஞானி தமிழறிஞர் ஒரிசா பாலு..!! யார் இவர்..?
கடல்சார் தமிழறிஞர் ஒரிசா பாலு அவர்களை பற்றிய ஒரு சிறு தொகுப்பு…
தமிழ் மொழியின் தொன்மையை உலகளவில் கடல் வழியாகத் தேடி வந்தவர் தான் ஒரிசா பாலு இவரின் இயற்பெயர் சிவ பாலசுப்பிரமணி கடந்த 1963-ம் ஆண்டு திருச்சி உறையூரில் பிறந்தவர்..
கடல் வழியாக வணிகம்., பயணம்., வியாபாரம் செய்ய வந்தவர்களில் ஐவரும் ஒருவர் என சொல்லலாம்.. ஆனால் அவர் அதற்காக மட்டும் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை..
கடலியல் தமிழரின் தொன்மையான வரலாறு தொடர்பாக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொல்லியல் நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
குமரிக்கண்டம் கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானது என சொல்லலாம்.. அதேபோல் தமிழர் வரலாற்றை புவியியலை அடிப்படையாகக் கொண்டு நவீன தொல்லியல் நுட்பங்களையும் பண்டைய மரபுசார் அறிவை பின்புலமாகக் கொண்டும் ஆய்வு செய்தவர்.
கடந்த 1989-ம் ஆண்டு ஒரிசாவின் கலாசாரத்தைத் தீர ஆராய்ச்சி செய்ததால் இவர் ஒரிசா பாலு என்று அழைக்கப்பட்டார். கடல் வழியாகத் தமிழர்கள் பயணம் செய்ததை அறியப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து அங்கு இருக்கும் தமிழர்களுடன் உரையாடி தனது ஆய்வினை தொடர்ந்த வர் இவர்,
“சிந்து நாகரிகம், கிரேக்க நாகரிகம், சீன நாகரிகம் எகிப்து நாகரிகம் என எல்லாவற்றிலும் தமிழருடைய ஊடுருவல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். கொரியாவைப் பார்க்கும் போது கொரிய மொழியில் 4000 சொற்கள் தமிழிலிருந்து எடுக்கப்பட்டதாக இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் சீனா, பர்மா, தாய்லாந்து, மலேசியா என வெகுவான மரபுகளில் தமிழர்களுடைய மரபு கலந்திருக்கிறது என எடுத்துரைத்தவர்.
மீனவர்கள் சார்ந்த மாத இதழுக்கு ஆலோசகராக பணிபுரிந்தவர். அன்றைய காலங்களில் மீனவர்களின் வேதனை., மீனவர்கள் சிறையில் அடைப்பு, மீன் வளம், பாய்மரக் கப்பல், நீர்மூழ்கிகள், மானுடவியல், விலங்கு மற்றும் தாவரம், கடல் சார் தொல்லியல், வரலாறு, பண்பாடுகள், ஆமைகள் பற்றிய ஆய்வு, பாறை ஓவியங்கள், இயற்கை சார்ந்த புவி சுழற்சி என அனைத்து தலைப்பு பற்றி கட்டுரைகளை பத்திரிக்கை மூலம் எடுத்து சொன்னவர்..
கடல் சார் குழுமம் மற்றும் ஏனைய அமைப்புகளில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். மேலும் தனது ஆய்வுகளின் தொடர்ச்சியாய் கீழடி போலத் தமிழகத்தில் இன்னும் பல்வேறு இடங்கள் அகழாய்வு செய்யப்பட்ட வேண்டியுள்ளது என்று வலியுறுத்திச் சென்றிருக்கிறார்.
வரலாற்றாசிரியர், ஆய்வாளர், விஞ்ஞானி, எழுத்தாளர் என தனது வாழ்க்கையை இவற்றுக்காகவே அர்பணித்தவர் தான் ஒரிசா பாலு. முக்கியமாக தனது வாழ்வில் பல பரிமாணங்களைத் தமிழிற்காகவே தொட்டிருந்த ஒரிசா பாலு கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி காலமானார்.. அவரை பற்றிய இந்த தொகுப்பை எழுதுவதில் மதிமுகம் என்று பெருமைக்கொள்ளும்..