ஒட்டன்சத்திரம் அருகே பணத்தை திருடியவரை அவரது மாமா மற்றும் கூட்டாளிகள் கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கையில் உள்ள தனியார் நெய் நிறுவனத்தில் ஓட்டுனராக பணிபுரிந்த அம்பிளிக்கையை சேர்ந்த சுரேஸ்குமார் என்பவர் அந்த நிறுவனத்தில் 20 நாட்களுக்கு முன்பாக ரூபாய் 6 லட்சத்தை கையாடல் செய்து தலைமறைவாக இருந்துள்ளார்.அந்த நிறுவனத்தில் அவரை வேலைக்கு சேர்த்து விட்ட அக்கா கணவர் வடிவேலிடம் சுரேஷ்குமாரை பிடித்து அந்த நிறுவனம் பணத்தைக் மீட்டுத்தர வலியுறுத்துள்ளது.
இதனை தொடர்ந்து வடிவேல் மற்றும் மனோகரன் ஆகியோர் தென்காசியில் சுரேஷ்குமார் இருப்பதாக தெரிந்து அங்கு சென்று சுரேஷ்குமாரை பிடித்துள்ளனர்.
மேலும் அவர் கையாடல் செய்திருந்த 6 லட்சத்தில் 3.5 லட்சம் செலவு செய்துள்ளார் மீதம் உள்ள தொகையை வடிவேல் கைப்பற்றியுள்ளார். மேலும் சுரேஷ்குமார் செலவு செய்திருந்த பணத்திற்கு பதிலாக அவரது வீட்டை எழுதி வாங்கி உள்ளனர்.மேலும் சுரேஷ்குமாரை வடிவேல் மற்றும் வடிவேலின் நண்பர்கள் சிலர் அடித்து சித்திரவதை செய்து பிறகு அவரை கொலை செய்துள்ளனர். சுரேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லி சுரேஷ்குமார் தாய் மற்றும் அவரது உறவினர்களிடம் நாடகம் ஆடி உள்ளனர் அன்று இரவே யாரிடமும் சொல்லாமல் சில உறவினர்கள் முன்னிலையில் யாருக்கும் தெரியாமல் சுரேஷ்குமாரின் பிரேதத்தை அம்பிளிக்கையில் உள்ள மயானத்தில் எரித்துள்ளனர். அவர் இறந்ததில் சந்தேகம் இருப்பதாக அம்பிளிக்கை கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் என்பவர் அம்பிளிக்கை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனி படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி சுரேஷ்குமாரை கொலை செய்த அம்பிளிக்கையை சேர்ந்த உறவினர் மாமா வடிவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மனோகரன், பாண்டி,சிவஞானம், சதீஷ்குமார், முத்துக்குமார், உள்ளிட்ட ஆறு பேரை அம்பிளிக்கை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். அதன் பின் அவர்கள் ஆறு பேரையும் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பிரேதத்தை எரிக்க பயன்படுத்திய வாகனத்தையும் காவல்துறையினர் சிறை பிடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post