ஆதீனங்களை கவுரவப்படுத்திவிட்டதால் தமிழ்நாட்டில் பெரிதாக பாஜகவுக்கு எந்த ஒரு ஆதாயமும் கிடைக்கப்போவது இல்லை என மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் விமர்சித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீனங்கள் சார்பில் பிரதமர் மோடி கையில் செங்கோல் வழங்கப்பட்டது. அந்த செங்கோலானது நாட்டின் முதல் பிரதமராக பதவியேற்றுக்கொண்ட நேருவிற்கு ஆதினத்தால் வழங்கப்பட்டதாகவும், அதனை தற்போது பிரக்யராஜ் அருங்காட்சியகத்தில் இருந்து கண்டுபிடித்து கொண்டு வந்ததாகவும் பாஜக கூறிவருகிறது.
இந்நிலையில் செங்கோல் விவகாரத்தில் எழுந்துள்ள சர்ச்சையை மக்களுக்கு தெளிவுப்படுத்தும் வகையில், ‘1947 ஆகஸ்ட் 15ல் நடந்தது என்ன?’ எனும் தலைப்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இன்று செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் கலந்துகொண்டு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், “செங்கோல் விவகாரத்தில் பல கட்டுக்கதைகள் அரசியலில் வந்துள்ளன. உண்மைகள் என்ன என்று தெரிய வேண்டும். எது நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
அந்த காலத்தில் இருக்கக்கூடிய ஆதாரங்களுக்கும், இன்று சொல்லக்கூடிய கட்டுக்கதைக்கும் என்ன இடையில் உள்ள உண்மை என்ன என்பதை அளித்து கொள்ள வேண்டும். மவுண்ட்பேட்டன், நேருவிடம் அதிகாரத்தை ஒப்படைக்க ஏதாவது விழா நடத்த வேண்டுமா? என கேட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. சுதந்திரத்தின் போது நேருவிடம் செங்கோல் வழங்கியது போன்று வெளியான வீடியோ, நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டது என்றும் தெளிவுப்படுத்தினார்.
1968ம் ஆண்டு கல்லூரி ஒன்றில் உரையாற்றிய மவுண்ட்பேட்டன் நேருவிடம் ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தது குறித்து பேசியுள்ளார். ஆனால் அதில், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். ஆனால் செங்கோல் பரிமாற்ற நிகழ்ச்சி குறித்து தான் நேருவிடம் கேட்டதாக எவ்வித தகவலும் இடம் பெறவில்லை. அதனிடம் என்னிடம் பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
அப்போதைய வைரஸ்ராயான மவுண்ட்பேட்டர் நேருவை பிரதமராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அந்த நொடியில் இருந்து இந்திய சுதந்திரம் பெற்றது என விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள ஆதீனங்களை கவுரவப்படுத்துவதால் பாஜக-வுக்கு எந்தப் பயனும் இல்லை என்று என்.ராம் கூறினார்.
Discussion about this post