இன்றைய காலகட்டத்தில் எல்லாமே டிஜிட்டல் மயம்தான். திரை துறையும் ஓடிடி தளங்களை நோக்கி பயணித்து வருகிறது. சின்னத்திரைக்கும் அதேகதி தான். பெரிய நிறுவனங்கள் தங்களின் விளம்பரங்களை சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்தவே பெரிதும் விரும்புகின்றன. மேலும் அதில் நடிக்கும் நடிகர்களின் தனிப்பட்ட சமூக வலைதள கணக்குகளில் விளம்பரங்களை போஸ்ட் செய்து வருகின்றனர். Highest Paid Indian Actresses on Instagram
அந்த வகையில் இந்திய நடிகைகள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் விளம்பர போஸ்ட் மூலம் அவர்கள் பெறும் சம்பளத் தொகை எவ்வளவு என்பதை இந்த பதிவில் கான்போம்.
கத்ரீனா கைஃப்:
இன்ஸ்டாகிராமில் 80.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார் பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், Lenskart மற்றும் Reebok உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து பணிபுரியும் கத்ரீனா, ஒரு போஸ்டுக்கு 97 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
அனுஷ்கா சர்மா:
கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா, சுமார் 68.9 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார். இவர் ஒரு விளம்பர பதிவுக்கு சுமார் 1 கோடி ரூபாய் வரை வருமானம் பெறுகிறார்.
ஆலியா பட்:
பாலிவுட் நடிகை ஆலியா பட், 86.2 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார். Maybelline மற்றும் MakeMyTrip போன்ற நிறுவனங்களுக்கு விளம்பர தூதரக இருந்து வரும் ஆலியா, ஒரு விளம்பர பதிவுக்கு 85 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
ஷ்ரத்தா கபூர்:
இன்ஸ்டாகிராமில் 94.1 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளனர் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர். AJIO மற்றும் MyGlamm போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பர தூதரக இருந்து வரும் ஷ்ரத்தா, ஒரு இன்ஸ்டாகிராம் விளம்பர பதிவுக்கு 1.4 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
தீபிகா படுகோன்: Highest Paid Indian Actresses on Instagram
பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், 80.2 மில்லியன் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸ் வைத்துள்ளார். Levi’s மாற்றும் Adidas போன்ற மிக பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர தூதரக இருந்து வருகிறார். இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.
பிரியங்கா சோப்ரா: Highest Paid Indian Actresses on Instagram
பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் கலக்கி வருபவர் பிரியங்கா சோப்ரா. இன்ஸ்டாகிராமில் சுமார் 92.4 மில்லியன் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள இவர், Tiffany & Co and Ralph Lauren போன்ற பெரிய நிறுவனங்களுக்கு விளம்பர தூதரக இருந்து வருகிறார். இவர் பதிவிடும் ஒரு விளம்பர பதிவுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார்.