உயர்ந்த கல்விக்கட்டணம்..!! எந்த படிப்பிற்கு தெரியுமா..?
தங்கம் விலை பெட்ரோல் விலைவாசிகள் உயருகிறது என்று பார்த்தால்.., தற்போது உயர்கல்வி படிப்புகளான மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயருவதாக ஒரு தகவல் வெளியானது. அதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு வேலைப்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி செயல்பட்டு வருகிறார். இந்த குழுவானது, மூன்று வகையான உயர்கல்வி படிப்புகளுக்கான புதிய கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்காக விண்ணப்பங்களை பெற்றிருக்கிறது.
அதாவது, பி.இ., பி.டெக்., போன்ற பொறியியல் படிப்புகள், பாரா மெடிக்கல், மருத்துவம், உட்பட 17 வகையான துணை மருத்துவ படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை நடத்தும் கல்லூரிகளில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு அதற்கான சம்மனும் அனுப்பட்டுள்ளது.
அதிலும், பொறியியல் படிப்புகளை நடத்து கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகங்கள், 25 சதவீதம் வரை கட்டண உயர்வு கேட்டு கட்டண நிர்ணயக் குழுவிடம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில் இருந்தே பொறியியல் படிப்புகள், துணை மருத்துவ படிப்புகள் மற்றும் கல்வியியல் படிப்புகளுக்கான கட்டணங்கள் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..