பரப்பான தேர்தல் களம்..!! இந்த தேர்தலில் புது மாற்றமா..? ராதாகிருஷ்ணன் பேட்டி..!!
11 லட்சத்தி 56 ஆயிரத்து 574 பேருக்கு பூத் சிலிப் கொடுத்துள்ளோம் விடுமுறையையும் பொருட்படுத்தாது பூத் சிலிப் வழங்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என தற்போது வரை 931 தபால் வாக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களில் வாக்களிக்க செல்லும் சென்னையில் உள்ளோர் தேர்தல் தினத்தன்று செல்லாமல், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே பயணங்களை திட்டமிட்டு கொள்ளவும்.
தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பேட்டி :
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தலைமையில், தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் தேர்தல் பணிகளில் 19,419 பேரில் 372 பேர் மட்டுமே உடல் நலக்குறைவு மற்ற பிற காரணங்களால் தேர்தல் பணிகளுக்கு வரவில்லை.
16 சட்டமன்ற தொகுதிகளில் 616 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 23 வாக்குச்சாவடிகள் மிக முக்கியமாக கவனிக்க கூடியவையாகவும், இவை இல்லாமல் கூடுதலாக பத்து வாக்குச்சாவடிகளோடு 135 பதட்டமான இடங்கள் உட்பட 769 இடங்கள் கூடுதல் பாதுகாப்புக்கு கண்டறியப்பட்டுள்ளது.
35 லட்சம் வாக்காளர்களில் 11 லட்சத்தி 56 ஆயிரத்து 574 பேருக்கு பூத் சிலிப் கொடுத்துள்ளோம். நேற்றைய தினம் மட்டும் 3 லட்சத்து 56 ஆயிரத்து 877 பேருக்கு கொடுத்துள்ளோம்.
விடுமுறையையும் பொருட்படுத்தாது பூத் சிலிப் வழங்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு முன்னதாகவே பூத் சிலிப் கொடுத்து விட முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த பணியினை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறோம்.
10,438 மாற்றுத்திறனாளிகள், 63 ஆயிரத்து 683 முதியவர்களில் தபால் வாக்கு கோரி 4,500 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தபால் வாக்குகளை பெற 67 குழுக்கள் வீட்டிற்கே சென்று பெற்று வருகின்றனர்.
தற்போது வரை 82 மாற்றுத்திறனாளிகள், 849 பேர் முதியவர்கள் (85 வயதிற்கும் மேற்பட்டவர்கள்) என 931 பேரிடம் தபால் வாக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் உதவி தேர்தல் அதிகாரிகள், போட்டியிடம் வேட்பாளர்கள் முன்னிலையில் வேட்பாளர்கள் செட்டிங் நாளை நடைபெற உள்ளது. இதற்கு தேவையான பெல் நிறுவன பொறியாளர்களும் வருகை தந்துள்ளனர்.
தேர்தலின் போது திடிரென வாக்கு இயத்ததிரங்கள் பழுதடைந்தால் 10 வாக்குச்சாவடிகளுக்கு 1 துறை அதிகாரி என 269 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளை சுற்றி வரும் அவர்களிடம் உள்ள மாற்று வாக்கு இயந்திரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வாக்குப்பதிவு தினத்தன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பிறந்த இடங்களில் வாக்கு இருப்பின் தேர்தல் தினத்தன்று செல்லாமல், இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னதாகவே பயணங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..