தலைமறைவான கஸ்தூரி…!! பார்வையை திருப்பிய தனிப்படை…!! விசாரணையில் கிடைத்த தகவல்..!!
நடிகை கஸ்தூரி தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறு பேசிய வழக்கில் அவர் மீது தொடர் புகார்கள் எழுந்த நிலையில் தலைமறைவாகியுள்ளார்.. எனவே நடிகை கஸ்தூரியை தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.
கடந்த நவம்பர் 3ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் பிராமண சமூகத்தினர்கள் குறித்து அவதூறு பேச்சுகள் எழுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.. பாஜக நிர்வாகி கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகை கஸ்தூரி, மதுவந்தி மற்றும் 3000க்கும் மேற்பட்ட பிராமணர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்..
அப்போது அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, மேஜர் முகுந்த் தியாகராஜன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை படத்தில் ஏன் மறைத்தார்கள்., என கேள்வி எழுப்பினார்… மேலும் திராவிடம் குறித்தும், திமுக குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்.
மேலும் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் கொச்சையாகவும் அவதூறாகவும் பேசியுள்ளார்., இதனால் அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழத் தொடங்கியது..
அதன் பின்னர் நடிகை கஸ்தூரி சமூகவலைதளம் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். ஆனால் தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தன்னுடைய வீட்டிலேயே செய்தியாளர்களை வரவழைத்து “நான் தெலுங்கு பேசும் மக்களை தவறாக பேசவில்லை. எனது பேச்சு திரிக்கப்பட்டுவிட்டது. தமிழும் தெலுங்கும் என இரு கண்கள் மாதிரி., தெலுங்கை நானும் என் குழந்தையும் பாவிக்கிறோம். எனது மாமியார் வீட்டினரும் தெலுங்கு பேசுபவர்கள் தான்., தெலுங்கு மக்கள் என்னை அவர்களது வீட்டில் ஒருத்தியாக பார்கின்றனர்., அப்படி இருக்கும் போது., நான் எப்படி தெலுங்கு மக்களை பற்றி அவதூறாக பேசுவேன்..
அப்போது அவர் பேசிய வீடியோவை நிருபர்கள் காண்பித்த போது., அதனை பார்க்க மறுத்துள்ளார்., மேலும் அது அவதூறு பரப்புவதற்காக சித்தரிக்கபட்ட வீடியோ என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்..
இதற்கிடையில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் பொதுச் செயலாளர் நந்தகோபால் எழும்பூர் காவல் நிலையத்தில் கஸ்தூரி மீது புகார் அளித்தார். அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது., தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக நடிகை கஸ்தூரி மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லையென்றால் நாங்கள் போராட்டதில் இறங்குவோம் என கூறியுள்ளனர்.
எனவே நடிகை கஸ்தூரி மீது கடந்த நவம்பர் 5ம் தேதி 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது., மேலும் அவர் நேரில் ஆஜராக வேண்டும் எனவும் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகததால் நவம்பர் 9ம் தேதியன்று போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
அவர் தலைமறைவாகி இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் காவலர்கள் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்., அவரது செல்போன் எண்ணை அழைத்த போது போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது., இதனால் அவர் தலைமறைவாகி இருப்பது உறுதி செய்தனர்
எனவே அவரை கைது செய்வதற்காக தனிப்படை அமைத்து காவலர்கள் கஸ்தூரியை தீவிரமாக தேடி வருகின்றனர்.. நடிகை கஸ்தூரி அடிக்கடி ஹைதராபாத் செல்வார் என தகவல் கிடைத்தது. அதன் படி அவர் ஹைதராபாத் சென்றிருக்கலாம் என்ற நோக்கில் ஹைதராபாத்திற்கு சென்று காவலர்கள் தேடும் பணியை தொடங்கியுள்ளனர்..
மேலும் ஆந்திரா அரசியலில் குதிப்பேன் என கஸ்தூரி கூறியிருந்த நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவில் அவர் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..