வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அருகே இனி டாஸ்மாக் இல்லை என டாஸ்மாக் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில், வழிபாட்டுத் தலங்கள் பள்ளி கல்லூரி வளாகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவு வரை உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுவதற்தான கணக்கெடுப்பை தொடங்க அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற டாஸ்மாக் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
- நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தற்போது 50 மீட்டர் தொலைவு வரை மட்டுமே கணக்கிடப்பட்டு வந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் 100 மீட்டர் வரை இருக்கக்கூடிய கடைகளை கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- ஊரகப் பகுதிகளில் மட்டுமே 100 மீட்டர் தொலைவு வரை டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்ட நிலையில் நகர்ப்புற பகுதிகளிலும் நடைமுறையை பின்பற்ற உத்தரவு
- விரைவில் 500 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட உள்ள நிலையில் கணக்கெடுக்க உத்தரவு.
- டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் மாவட்ட வாரியாக வாட்ஸ் அப் குழுக்கள் அமைத்து கூடுதல் விலை உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவு.
Discussion about this post