காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து பட்டு சேலை எடுக்க ஏராளமானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவில் நகரம் மற்றும் பட்டு நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சி மாநகரில் 1000 க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் கூட்டுறவு பட்டு சேலை கடைகள் இயங்கி வருகிறது.
விடுமுறை தினம் மற்றும் முகூர்த்த தினம் என்பதால் பல்வேறு மாநில மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பட்டு சேலை எடுப்பதற்காக ஏராளமானோர் குவிந்ததால் காஞ்சிபுரம் முக்கிய சாலையாக விளங்கும் காந்தி சாலை மூங்கில் மண்டபம் விளக்கொளி பெருமாள் கோவில் தெரு, ரங்கசாமி குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.