தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!!
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்குத்திசையின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 19ம் தேதி வரை மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிக்கையில் மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதியில் இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என அறிவித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூரில் லேசான மழையும், தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் கடலூர், புதுச்சேரி போன்ற மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மட்டுமின்றி நாளையும் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இடிமின்னலுடன் கூடிய மழையும் ஒரு சில பகுதியில் லேசான மழையும் பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடனும்.., ஒரு சில பகுதியில் கனமழையும், புறநகர் பகுதியில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிக பட்ச வெப்பநிலையாக 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்ப நிலையாக 27-28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மேக மூட்டத்துடன் அதற்கு பின் லேசான மழையும் பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களுக்கு கடலோர பகுதியில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக காற்று சுழற்சி ஏற்பட்டு இருப்பதால்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை விடுத்துள்ளது.
ஆந்திர கடலோர பகுதியிலும் மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் இலங்கை கடலோர பகுதியிலும் சூறாவளி காற்று மணிக்கு 50 முதல் 55 கிமீ வேகத்தில் நிலவுவதால் அதி வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் இந்த பகுதியில் இருக்கும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post