தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இது இயல்பை விட 14 சதவீதம் அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது எனவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலசந்திரன் பேட்டி அளித்துள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையல் இந்த ஆழந்த் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று புயலாக மாறுமா என்பது குறித்தும் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்தும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வருகிறது.
இது தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து இலங்கை தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கனமழையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளைய தினம் டெல்டா மாவட்டங்கள் கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
12ஆம் தேதி திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும், திருவள்ளூர் தொடங்கி நாகப்பட்டினம் வரை வடக்கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.
மீனவர்களின் எச்சரிக்கை பொறுத்தவரை குமரி கடல், மன்னார் வளைகுடா, தமிழ்நாடு கடற்கரை பகுதி, தென்மேற்கு வங்க கடல், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூரைக்காற்று ஆனது மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் அவ்வை போது 55 கிலோமீட்டர் வேகத்தில் 13ம் தேதி வரை சூரைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை தமிழகம், புதுவை, காரைக்காலில் அக்டோபர் 1 முதல் இன்று வரை காலகட்டத்தில் 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் 40 சென்டிமீட்டர் தான் இயல்பான மழை பொழிவு. ஆனால் தற்போது இயல்பை விட 14 சதவீதம் அதிகமாக மழை பொழிவு ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை 22 மாவட்டங்களில் இயல்பை ஒட்டியும், 15 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 3 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகியுள்ளது என தெரிவித்தார்.
தற்போதைய சூழலில் இது புயலாக மாற வாய்ப்பு இல்லை எனவும் நாளை முதல் சென்னையில் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..