12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…!!
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் தாழ்வு உருவாக காலதாமதம் ஆகியிருப்பதால் இன்று நாகப்பட்டினம், மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்மேற்கு வங்கக்கடலின் மேல் பகுதியில் நிலவியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதில் தற்போது கால தாமதம் ஆக்கிக்கொண்டு இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..
மேலும், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..