தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை…!! அதிகாரிகளுக்கு பறந்த கடிதம்..!
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் இன்னும் 4 நாட்களுக்கு தமிழகத்தில் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது., இந்த ஆண்டு பருவமழை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில்
வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் பேரிடர்களை கையாளுவதற்கான முன்னெரிச்சை நடவடிக்கைகள் குறித்த பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் :
அதாவது கனமழை பெய்யும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் இப்போதில் இருந்தே மீட்பு பணியினர் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மாவட்ட அளவில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதியுள்ளார்.
15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :
இன்று முதல் இன்னும் இரண்டு நாட்களுக்கு சென்னை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 15 மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது
அதேபோல் நாளை திருப்பூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழை முதல் அதிக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது..
அதேபோல் நாளை மறுநாள் ( அக்டோபர் 13ம் தேதியன்று ) சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது..
அதேபோல் திருப்பூர், கோவை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில், அதிக கனமழை முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது..
அக்டோபர் 14-ம் தேதி கனமழை பெய்யும் பகுதிகள் :
அதேபோல் அக்டோபர் 14-ம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது..
அக்டோபர் 15 -ம் தேதி கனமழை பெய்யும் பகுதிகள் :
அக்டோபர் 15ம் தேதி சென்னை, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.