மீண்டும் தொடங்கும் கனமழை..! இந்தியாவிற்கு கனமழை எச்சரிக்கை..!!
ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இன்று மற்றும் நாளை தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் வெப்பமாக இருக்கும் எனவும்.., அதிக பட்சமாக 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் வரையிலும் ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் எனவும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலையாக 37-38 செல்சியஸிற்கும் குறைவாக 28-29 டிகிரி வரை இருக்கும் என அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதியில் 55கிமீ முதல் 70கிமீ வரை வேகமாக காற்று வீசக்கூடும் ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி சூறைக் காற்று மட்டுமின்றி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை தென்தமிழக கடலோர பகுதியில் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிகடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிமீ முதல் 65கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
ஆகஸ்ட் 2 மற்றும் 3ம் தேதி ஆந்திர மற்றும் அதனை சுற்றியுள்ள கடலோர பகுதியிலும் 65 கிலோ மீட்டர் வரை சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே ஆகஸ்ட் 2 மற்றும் 3 ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள கடலில் யாரும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post