தமிழக்தில் 7 நாட்களுக்கு கனமழை..! அந்த பகுதிகளுக்கு ரெட் அலர்ட்..!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டு காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழையும், காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும்., நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மும்பையில் கடந்த மாதம் 10-ந்தேதி பருவமழை தொடங்கியது. எனினும் நகரில் மிதமான மழையே பெய்து வந்தது. இந்த சூழலில் மும்பையை அடுத்த மாவட்டங்களான நவிமும்பை, தானே, பால்கர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் மழை வெளுத்து வாங்கியது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 1 மணி முதல் மும்பையில் பலத்த மழை பெய்தது.
ரெட் அலர்ட் :
விடிய, விடிய மும்பை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது. பேய் மழை காரணமாக மும்பையில் தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. குறிப்பாக மும்பை கிழக்கு, மேற்கு புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.
இந்தநிலையில் மாலை 5.30 மணியளவில் நகருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மும்பையில் மழை இடைவிடாமல் பெய்தது. மாலை 6 மணி முதல் இரவு வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. பலத்த மழை காரணமாக குர்லா, சயான், சாக்கிநாக்கா, அந்தேரி, மலாடு, கோரேகாவ், தகிசர், பாண்டுப், முல்லுண்டு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.
மழை எச்சரிக்கையை அடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மும்பையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நவிமும்பை, தானே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கும் இன்று ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ