சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…!! முக்கிய பகுதிகளில் மின்சாரம் தடை..!!
வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் குறிப்பிட்ட 10 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
தமிழத்தில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாகவே சென்னையில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது..
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும் எனவும்., சென்னையில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது…
அதன் படி நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.. குறிப்பாக வடசென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது., நேற்று இரவு முதல் பெய்த கனமழையால் சென்னையின் மெட்ரோ பணி நடைபெறும் இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.., மேலும் போரூர்., ஆவடி, மற்றும் கொரட்டூர், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்..