தமிழகத்தில் தொடரும் கனமழை..! குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட்..!
தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.12 முதல் 20 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் நாளை மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பு என்பதால் சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..