மாணவர்களின் நலனை பொருட்படுத்தாத தலைமை ஆசிரியர்..! அதிரடியான முடிவு எடுத்த பெற்றோர்..!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டகுளம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் தலைமை ஆசிரியர் லட்சுமி பள்ளி நிர்வாகத்தை சரியாக நடத்தவில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இது குறித்து மாணவர்கள் அவர்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.. பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிய பெற்றோர், இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாததால், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் எப்படி பொது தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்று இன்று தலைமை ஆசிரியரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் நேரில் சென்று கேள்வி கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பள்ளி தலைமை ஆசிரியர், அவர்களை பள்ளி வளாகத்தை விட்டு உடனடியாக வெளியேறும் படி கூறி அவமதிப்பதாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி தலைமை ஆசிரியரிடம் கேட்டபோது அவர் அலட்சியமாக பதில் கூறியதால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர், தலைமை ஆசிரியரை கேள்வி கேட்ட போது இன்றும் உரிய பதிலளிக்காமல் வெளியே சென்றதால் ஆத்திரமடைந்து மாணவர்களின் பெற்றோர்கள் தலைமை ஆசிரியரின் அறையை பூட்டி மாணவர்களுடன் பெற்றோர்களும் தலைமை ஆசிரியரை பள்ளியில் இருந்து நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..