ADVERTISEMENT
மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்-தூத்துக்குடி
தூத்துக்குடி அருகே மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி தட்டப்பாறை அருகே பேரூரணி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி முத்துமாரி இருவரும் கூலி வேலை செய்து வரும் நிலையில், பாலாஜி மது அருந்திவிட்டு வந்துள்ளார்.
இதனை முத்துமாரி கண்டித்ததால், ஆத்திரம் அடைந்த பாலாஜி மது போதையில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சராமரியாக குத்திவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த முத்துமாரியை 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரது உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.