தி கோட் படத்தில் நயன்தாரா நடிக்காததற்கு காரணம் தெரியுமா..?
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படமானது கடந்த செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகி தொடர்ந்து ஹவுஸ்ஃபுல்லாக தமிழ்நாட்டில் மட்டும் ஓடிய திரைப்படம் மற்ற இடங்களில் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களை கவரவில்லை.
விஜய் நடிப்பிலே இதுவரை இல்லாத அளவில் கமலஹாசன், ரஜினிகாந்த், அஜித், சூர்யா, விஜயகாந்த் என மற்ற நடிகர்களின் ரசிகர்களையும் கவரும் விதமாக வெங்கட் பிரபு அவர்கள் தி கோட் படத்தில் பல திருப்புமுனைகளை வைத்திருந்தார். தோனியை காட்டி கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தினார். இதில் மேலும் த்ரிஷா மற்றும் சிவகார்த்திகேயன் என காட்டியது தான் ஏஜேஎஸ் நிறுவனம் போட்ட காசை எடுக்க முடுந்தது என சொல்கிறார்கள்.
முதலில் தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் அம்மாவாகவும் நடிக்க ஜோடிகா தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் என தகவல் வந்தது. ஆனால் அதற்கு சூரியா தரப்பில் சம்மதம் வராத நிலையில் அந்த வாய்ப்பை ஜோதிகா தவறவிட்டார் என பேச்சுகள் வந்தது.
ஆனால் வெங்கட் பிரபு அளித்த பேட்டி ஒன்றில் தி கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க நயன்தாராவை திட்டமிட்டதாகவும் ஆனால் நயன்தாரா அவர்கள் சில காரணங்களுக்காக இதை நிராகரித்துவிட்டார் எனவும் சொல்லிருக்கிறார்.
நடிகை நயன்தாரா அவர்களின் முன்னால் காதலன் நடிகர் பிரபுதேவா அவர்கள் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதால் நயன்தார இந்த படத்தில் நடிக்கவில்லை என தகவல் கசிந்த நிலையில், ரசிகர்கள் நயன்தாரா எடுத்தது சரியான முடிவு தான் விஜய்க்கு அம்மாவாக நயன்தாரா நடித்திருந்தால் அது சரியாக வராது என்றும் ரசிகர்கள் நினைக்கிறார்கள்.
நடிகர் விஜயுடன் வசீகரா படத்தில் ஜோடியாக நடித்த சினேகா தான் இதற்கு சரியானது என்றும் இவர்கள் ரொம்ப நாளைக்கு அப்பறம் இணைந்துள்ளதாகவும், சினேகாவை தவிர யாரும் சரியான பொருத்தமாக இருந்திருக்க வாய்ப்பில்லை எனவும் கூறுகிறார்கள்.