தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் இறுதி விசாரணை தள்ளி வைப்பு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு இறுதி விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலனுடன் சம்பந்தப்பட்டது என தெரிவித்தனர்.
ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது எனவும் கருத்து தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த ஆலையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்கலாம் என்றும், அந்த நிபுணர் குழுவின் வழிகாட்டுதல்படி முடிவு எடுக்கலாம் என தெரிவித்தனர்.
மேலும், தமிழக அரசின் எதிர்ப்புகளையும், கருத்துகளையும் புறந்தள்ளிவிட முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள், வேதாந்தா நிறுவனம் தனது தரப்பு வாதத்தையும், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவையும் சிறு குறிப்பாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இந்நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் ஆலையை மீண்டும் இயக்குவது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கலாம் என்ற யோசனை குறித்து ஆலோசிக்க அவகாசம் தேவை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவின் இறுதி விசாரணையை 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.