பாஜகவுடன் கூட்டணி இப்பவும் இல்லை, எப்பவும் இல்லை – அதிமுக ஜெயக்குமார்
பாஜகவுடன் கூட்டணி இப்பவும் இல்லை, எப்பவும் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப் பொருட்கள் கலாச்சாரத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க ஒன்றிய அரசுக்கு தமிழக அரசு உடனடியாக அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
பாஜக உடன் கூட்டணி இல்லை என பலமுறை சொல்லிவிட்டதாக தெரிவித்த அவர், பாஜக கூட்டணி அதிமுக கதவு எப்போதோ அடைக்கப்பட்டதாக தெரிவித்தார்.