அலுவலகத்தில் இருக்கும் போது திடீரென சரக்கு அடிக்க ஆசை வருகிறதா?. உடனே அருகில் உள்ள பார் அன்ட் ரெஸ்டாரன்ட், ஒயின் ஷாப் என்று கூகுளில் தேடுகிறீர்களா.. இனி கவலைப்பட வேண்டாம். அலுவலக நேரத்தில் குடிக்க வேண்டும் என நினைத்தால், வசதியாக குடிக்கலாம். எங்கும் ஓட வேண்டிய அவசியம் இல்லை என புதிய விதியை ஹரியானா அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, ஹரியானா அரசு புதிய மதுக் கொள்கையை கொண்டு வந்துள்ளது. இதில், நீங்கள் பணிபுரியும் இடத்திலேயே உங்களுக்கு விருப்பமான மது பானத்தை ருசிபார்க்கலாம்.
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் 5000 ஊழியர்களை கொண்ட கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டு ஜூன் 12 ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் புதிய கொள்கையின்படி, குறைந்தபட்சம் 5,000 பணியாளர்கள் உள்ள அலுவலக வளாகங்களில் பீர் அல்லது ஒயின் அருந்தலாம். குறைந்தபட்ச பரப்பளவு 1 லட்சம் சதுர அடி. அதாவது அலுவலகப் பகுதி இதைவிட அதிகமாக இருக்க வேண்டும். மாநிலத்தின் புதிய கலால் வரிக் கொள்கையின்படி, இதற்கு நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Haryana govt allows liquor at workplace
Discussion about this post