Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாற்றம்.. பிரிய மனமில்லதா மாணவிகள் செய்த செயல்..!

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 17 மாணவர்களும், 18 மாணவிகளும் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் 10 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

by Admin
July 6, 2024

பள்ளி தலைமை ஆசிரியர் பணி மாற்றம்.. பிரிய மனமில்லதா மாணவிகள் செய்த செயல்..!

 

 

 

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அடுத்த வகுரப்பம்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியை, 34 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 17 மாணவர்களும், 18 மாணவிகளும் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு முதலாம் வகுப்பில் 10 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராக தமிழ்மணி பொறுப்பேற்றார். அவர் வந்தபோது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை எட்டு ஆக இருந்த நிலையில், தலைமையாசிரியர் தமிழ்மணி வீடு வீடாக சென்று மாணவர்களின் பெற்றவர்களிடம் பேசி மாணவர்களை, இதே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார்.

தொடர்ந்து தலைமையாசிரியர் தமிழ்மணி மீது நம்பிக்கை கொண்ட பெற்றோர்கள் அரசு தொடக்கப்பள்ளியில் பிள்ளைகளை சேர்த்துள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர் தனது தனிப்பட்ட ஆர்வத்தால் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது, அதிக கவனம் செலுத்தி படிக்க வைப்பது, மாணவர்களின் தனித்திறமையை கண்டறிந்து, பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, கவிதை, விளையாட்டு என பல்வேறு இடங்களுக்கு அழைத்து போட்டிகளில் கலந்து கொள்ள வைத்துள்ளார்.

இதனால் மாவட்ட அளவில் மாணவர்கள் முதலிடமும் பிடித்துள்ளனர். அதேபோல் படிப்பிலும் நன்றாக கவனம் செலுத்தி, ஆங்கிலம் நன்றாக படித்து வந்துள்ளார்.

தமிழ்மணி ஆசிரியர் பணியில் சேர்ந்த நாள் முதல், பள்ளியின் தரம் அதிகரித்து, மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற பொது பணி மாறுதல் கலந்தாய்வில், தமிழ்மணி ஆசிரியர், செங்குட்டை அரசு தொடக்கப் பள்ளிக்கு பணி மாறுதல் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் பணி மாறுதல் பெற்றுள்ளதாக சொல்லிவிட்டு சென்றுள்ளார். அப்பொழுது தலைமை ஆசிரியரை பிரிய மனம் இல்லாத மாணவ மாணவிகள் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். இதனை கண்ட தலைமை ஆசிரியரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்மணியை மீண்டும், வகுரப்பம்பட்டி பள்ளிக்கு பணியமர்த்த வேண்டுமென வலியுறுத்தி, மாணவ, மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும், மாணவர்களை பள்ளிக்குள் அனுப்பாமல், பள்ளியின் நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மொரப்பூர் வட்டார கல்வி அலுவலர், காவல் துறையினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் தங்களுக்கு தமிழ்மணி ஆசிரியரை மீண்டும் பணியை அமர்த்த வேண்டும், அவர் வந்த பிறகுதான் இந்த பள்ளி நன்கு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது.

அவரை நம்பியே மெட்ரிகுலேஷன் படித்த பிள்ளைகளை கூட அரசு பள்ளியில் சேர்த்துள்ளோம். அவரைப் போல் பிள்ளைகளின் மீது கவனம் செலுத்தும் ஆசிரியர்கள் எங்களுக்கு கிடைக்க மாட்டார்கள்.

எனவே அவரை மீண்டும் இங்கு பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி பேசினார். ஆனால் பணி மாறுதலில் அவர் பெற்றுள்ளதால் இப்போதைக்கு செய்ய முடியாது ஆனால் அவரை பணி மாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் பெற்றோர்கள், ஆசிரியரை திரும்பவும் பணியமர்த்தும் வரை, நாங்கள் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்ப மாட்டோம் என கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் தமிழ்மணி ஆசிரியரே தங்கள் பள்ளிக்கு மீண்டும் வேண்டுமென மாணவ, மாணவிகளும் கண்ணீர் விட்டு அழுதனர்.

இதனை அறிந்த தலைமையாசிரியர் தமிழ்மணி நேரில் வந்து மாணவ, மாணவிகளை சமரசம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மாணவ, மாணவிகள் தொடர்ந்து கண்ணீர் விட்டு அழுததால், மாணவ்களை கண்டு தலைமையாசிரியரும் கண் கலங்கினார்.

இதனை தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் தலைமை ஆசிரியர்கள் இருவரிடமும் கடிதம் பெற்று, இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மீண்டும் தலைமை ஆசிரியர் இந்த பள்ளிக்கு வரவில்லை என்றால், பிள்ளைகளை வேறுபள்ளிக்கு சேர்த்து விடுவோம் என அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

மேலும் தலைமை ஆசிரியர் பணி மாறுதலில் சென்றதால், பிரிய மனம் இல்லாமல் பெற்றோர்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் கண் கலங்கி அழுததும், தன் மீது அளப்பரிய அன்பு வைத்துள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் அன்பை நினைத்து தலைமையாசிரியர் அழுததும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-பவானி கார்த்திக்

Tags: Head Masterschool head mastertharmapuriதலைமை ஆசியர் பணி மாற்றம்தலைமை ஆசிரியர்பள்ளி தலைமை ஆசியர்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post
MADHIMUGAM NEWS

நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு..! ஒன்றிய கல்வி அமைச்சருக்கு  காங்கிரஸ்  கண்டனம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.