ஹமாஸை அழிக்க முடியாது..! ராணுவ அதிகாரி விளக்கம்..!
2007ம் ஆண்டு முதல் தற்போது வரை பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி, இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

அந்த தாக்குதலில் 1500 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். ஹமாஸை அழித்தே ஆக வேண்டும் என்ற முயற்சியில் இஸ்ரேல் அந்த போரை தொடங்கியது. இஸ்ரேல் ஹமாஸ் இவர்களுக்கு இடையேயான போரில் இதுவரை 37,000க்கும் அதிகமான காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 86,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். 23 லட்சம் மக்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்துள்ளனர். பசி, பட்டிணியும், தொற்று நோய் காசாமக்களை தரைமட்டமாகிவிட்டது. போர் தொடங்கி 269 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இந்த போரின் நோக்கத்தை இஸ்ரேல் நிறைவேற்றியிருக்கிறதா..? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் “ஹமாஸ் என்பது ஒரு சிந்தனை, ஹமாஸ் ஒரு கட்சி, இது மக்களின் இதயங்களில் வேரூன்றி இருக்கிறது. ஹமாஸை ஒழிக்க முடியாது என இராணுவ வீரர் கூறியுள்ளார். போர் தொடங்கி 8 மாதங்களுக்கு பிறகு இஸ்ரேல் இதனை ஒப்புக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட அரபு நாடுகளுடன் இஸ்ரேல் ஒரு ஒப்பந்தத்தை கையெழுத்திட்டிருந்தது. அது மேலும் விரிவடைந்திருந்த நிலையில் இஸ்ரேலின் வளர்ச்சிக்கு உதவியிருக்கும். ஆனால் போர் அதனை சொதப்பிவிட்டது. அப்படியாக இஸ்ரேல், ஹமாஸ் மீதான தாக்குதலால் பெரும் பாதிப்புகளை சந்தித்திருக்கிறது என அவர் கூறியுள்ளார்..
– லோகேஸ்வரி.வெ

















