வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ராமாலை ஊராட்சிக்குட்பட்ட காந்தி கணவாய் கொல்லிமேடு அருகே 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் வசித்து வருகின்றனர்.
இதனிடையே, அந்தப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்கு அருகே ஒற்றை சிறுத்தை அதிக சத்துடன் உறுமிக் கொண்டு வருவதாக கூறினர்.
இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளதாகவும் , பெண்கள் மற்றும் குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதற்கு அச்சமடைவதாகவும், விவசாய நிலங்களுக்குள் ஒட்டிய வனப்பகுதியில் நடமாடி வரும் சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் ,விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்