ராசிபுரம் அருகே இறந்த தாத்தா பாட்டிக்கு பேரன்கள் கோவில் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த தாண்டக்கவுண்டம் புதூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் அய்யமுத்து(91)- அய்யம்மாள்(84), அய்யமுத்து ராமாயிபட்டி இருசாயிஅம்மன் கோவில் பூசாரியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு, அவரது மனைவி அய்யம்மாள் கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளனர். இருவரும் தங்களது இறப்பிற்குப் பிறகு தனது சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என தம்பதியினர் கூறியுள்ளனர்.
ஆனால் குடும்பத்தினரால் அதனை நிறைவேற்றமுடைய முடியாத நிலையில் தற்போது அவர்களின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அய்யமுத்து அய்யம்மாள் தம்பதியினருக்கு முழு உருவ சிலை அமைத்து கோவிலாக கட்டி பேரன்கள் மற்றும் குடும்பத்தினர் வழிபாடு செய்து வருகின்றனர்.இந்த நிலையில் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த சிற்பி அருண்குமார் 60 நாட்களில் 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது