“ஆளுநரின் செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமானது…” முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்..!!
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
தலைவர் கலைஞர் அவர்கள் “பராசக்தி” படத்தில் ஒரு வசனம் எழுதி இருப்பார், “இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளைப் பார்த்திருக்கிறது”. அதேபோல் இந்தச் சட்டமன்றமும், ஆளுநரைப் பொறுத்தவரை சில ஆண்டுகளாக விசித்திரமான காட்சிகளைத்தான் காண்கிறது. ஆளுநர் உரையாற்ற வருகிறார், ஆனால், உரையாற்றாமலேயே சென்றுவிடுகிறார். அதனால் தான் ஆளுநரின் செயல்பாடுகளை நான் சிறுபிள்ளைத்தனமானது என்று சொன்னேன்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 176 வரையறுத்துள்ள படி, ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்ற வேண்டும். அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை, அப்படியே வாசிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை மரபு. ஆனால், திட்டமிட்டு விதிமீறல் செய்வதில்தான் ஆளுநர் குறியாக இருக்கிறார். 2021-ஆம் ஆண்டு இப்போதிருக்கும் ஆளுநர், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு இதே ஆளுநர், தன்னுடைய முதல் உரையை முழுமையாக வாசித்தார். எதையும் மாற்றவில்லை. ஆனால், இந்த மூன்றாண்டு காலமாக என்னென்ன அபத்தமான காரணங்களை எல்லாம் சொல்லி படிப்பதை தவிர்த்தார் என்று இந்த அவையில் இருக்கும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். பேரவை தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதும், அவை நடவடிக்கைகள் முடியும்போது நாட்டுப்பண் ஒலிப்பதும்தான் காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு. இந்த விளக்கத்தைச் சொன்ன பிறகும் அவர் உரையாற்ற மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..