மகளிர் தினத்தையொட்டி தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்திரராஜனும், சட்டமன்ற உறுப்பினர் ரோஜாவும் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் விதத்தில் உலக அளவில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் ஆந்திர மாநில சட்டப்பேரவை உறுப்பினரும், நடிகையுமான ரோஜா ஆகியோர் பெண் பணியாளர்களுடன் கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடினர்.
முன்னதாக, தமிழிசை செளந்திரராஜனின் அழைப்பை ஏற்று ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார் ரோஜா. பின்பு இருவரும் மகளிர் தினத்தை உற்சாகமுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.