இயக்குநர் பாலா தனது மனைவியை சட்டப்பூர்வமாக விவகாரத்து பெற்று பிரிவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலா. விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பாலா.
இதனை தொடர்ந்து, ‘நந்தா’, ‘பிதாமகன்’ தொடங்கி பல முக்கியமான படங்களை இயக்கியவர். இவர் இயக்கிய படங்கள் ரசிகர்களின் மனதில் என்றும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இயக்குநராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் பல படங்களைக் கொடுத்திருக்கிறார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு தனது உறவுக்கார பெண்ணான முத்துமலரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது . 17 வருடங்களாக தம்பதிகளாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 5 ஆம் தேதி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, இருவருக்கும் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி உள்ளது.