சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கணிசமான அளவு குறைந்துள்ள போதும், சென்னையில் தொடர்ந்து 2 நாட்களாக தங்கத்தின் விலை மாற்றம் இல்லாமல் நீடிப்பது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும், அட்சய திருதியை அன்று பேரதிர்ச்சியாக அமையக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தங்கம் விலையில் மாற்றமில்லை:
இன்று (ஏப்ரல் 18) இரண்டாவது நாளாக 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையில் எந்த மாற்றமுமின்றி கிராமுக்கு 5,650 ரூபாய் ஆகவும், சவரனுக்கு ரூ.45,200 ஆகவும் விற்பனையாகிறது.
அதேபோல் 24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் 6,108 ரூபாய்க்கும், சவரன் 48 ஆயிரத்து 864 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
வெள்ளி விலை குறைவு:
தங்கத்தை போல் அல்லாமல் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 10 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து 80 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை:
ஃபெடரல் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு டாலர் மற்றும் பத்திர கருவூல விளைச்சலை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் மீதான முதலீடுகள் குறைந்துள்ளன. எனவே சர்வதேச சந்தையில் $2,006.80 ஆக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று $1,994.80 ஆக குறைந்துள்ளது.