தங்கம் வெள்ளி விலை நிலவரம்..! தங்கம் வாங்க இது சரியான நேரம்..!
மே மாதம் தொடக்கத்தில் தங்கம் விலையின் விலை, உச்சத்தை எட்டி இருந்ததால் மக்கள் அதிர்ச்சியில் இருந்தனர், அமேரிக்க வங்கியில் நஷ்டம் ஏற்பட்டதால், தமிழகத்தில் தங்கத்தின் விலை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
அதன் பின் தங்கம் வெள்ளி விலையில் ஏற்றம் இறக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் மாற்றம் ஏற்படவில்லை.
22காரட் ஆபரண தங்கத்தின் விலை, சவரனுக்கு 44,760 ரூபாய் ஆகவும். ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,595 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
18 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 36,664 ஆகவும், கிராமுக்கு 4,583 ரூபாயாகவும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து.., வெள்ளி கிராம் ஒன்றுக்கு 76.50 ஆகவும். கிலோ ஒன்றுக்கு 76,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-வெ.லோகேஸ்வரி.